nyanasnanaththin mukkiyaththuvam – Gnanasthanathin Mukkiyathuvam

ஞானஸ்நானத்தின் முக்கியத்துவம்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

ஞானஸ்நானத்தின் முக்கியத்துவம் – Gnanasthanathin Mukkiyathuvam
Significance of Baptism
கிறிஸ்துவில் விசுவாசம் வைக்கிற ஒருவன் கிறிஸ்துவோடு மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு, உயிர்த்தெழுந்தவனாக இருக்கிறான் என்று ஞானஸ்நானம் அறிவிக்கிறது (ரோமர் 6:3,4; கொலோ. 2:12). ஞானஸ்நானம் இரட்சிப்பிற்கான வழியல்ல, ஆனால் ஒருவனுடைய இரட்சிப்பின் ஒரு அறிவிப்பாகும். சரியான ஒழுங்கு, மூழ்கி ஞானஸ்நானம் எடுப்பதாகும். தண்ணீரால் தெளிக்கப்டுவது ஞானஸ்நானமே அல்ல. ஏனென்றால், இது கிறிஸ்துவின் மரணத்தையும் அடக்கம் பண்ணப்படுவதையும் உயிர்த்தெழுதலையும் காட்டுகிறது. புதிய ஏற்பாட்டில் நாம் காணும் ஒழுங்கு முதலாவது விசுவாசிப்பதும் பிறகு ஞானஸ்நானம் எடுப்பதும் தான். புதிய ஏற்பாடு வயது வந்தவர்களுக்கான ஞானஸ்நானம் அல்ல, விசுவாசிகளுக்கான ஞானஸ்நானத்தைப் போதிக்கிறது. ஒருவனுடைய வயது அல்ல, விசுவாசமே இந்தக் கட்டளைக்கு கீழ்ப்படிய முக்கியமானதாகும். பிள்ளைகளுக்கு ஞானஸ்நானம் கொடுப்பதற்கு கிறிஸ்து தம் சீஷர்களுக்கு கட்டளை கொடுக்கவில்லை. ஒரு பிள்ளை ஞானஸ்நானம் பெற்றதைப் பற்றி புதிய ஏற்பாட்டில் ஒரு ஆதாரமும் கிடையாது. ஒருவர் விசுவாசித்தப் பிறகு தான், பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றதைப் பற்றிப் பேசுகிறது.
Christmas Bible Verses and Their Significance
Psalm 91 – A Source of Strength and Comfort | Deeply Moving Bible Verses for Reflection
Come for All Things Are Now Ready: A Biblical Invitation to Abundance
Motivational Bible Verses for Inspired Living
Come For All Things Are Now Ready