O Parisuttha Aaviyae En Aanmavin Aanmavae

திருப்பலி பாடல்கள்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

ஓ பரிசுத்த ஆவியே,
என் ஆன்மாவின் ஆன்மாவே
உம்மை ஆராதனை செய்கின்றேன் – இறைவா
ஆராதனை செய்கின்றேன்
ஓ பரிசுத்த ஆவியே,
என் ஆன்மாவின் ஆன்மாவே
உம்மை ஆராதனை செய்கின்றேன் – இறைவா
ஆராதனை செய்கின்றேன்
என்னை ஒளிரச்செய்து வழிகாட்டும் – புது
வலுவூட்டி என்னைத் தேற்றும்
என் கடமை என்னவென்று காட்டும் – அதை
கருத்தாய் புரிந்திட தூண்டும்
என்ன நேர்ந்தாலும் நன்றி துதிகூறி
பணிவேன் என் இறைவா
உந்தன் திருவுளப்படி என்னை நடத்தும்
ஓ பரிசுத்த ஆவியே,
என் ஆன்மாவின் ஆன்மாவே
உம்மை ஆராதனை செய்கின்றேன் – இறைவா
ஆராதனை செய்கின்றேன்
என்னை ஒளிரச்செய்து வழிகாட்டும் – புது
வலுவூட்டி என்னைத் தேற்றும்
என் கடமை என்னவென்று காட்டும் – அதை
கருத்தாய் புரிந்திட தூண்டும்
என்ன நேர்ந்தாலும் நன்றி துதிகூறி
பணிவேன் என் இறைவா
உந்தன் திருவுளப்படி என்னை நடத்தும்
ஓ பரிசுத்த ஆவியே,
என் ஆன்மாவின் ஆன்மாவே
உம்மை ஆராதனை செய்கின்றேன் – இறைவா
ஆராதனை செய்கின்றேன் – இறைவா
ஆராதனை செய்கின்றேன் – இறைவா
ஆராதனை செய்கின்றேன்