onrumillai nan enre – unarnthitum

ஒன்றுமில்லை நான் என்றே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

ஒன்றுமில்லை நான் என்றே – உணர்ந்திடும்
உண்மை மனம் வேணும் (2)
ஒன்றுமில்லா வெறும் பாத்திரமாய் என்னை
ஒப்புவிக்க வேணும் (2)
யாவே என்றனை ஆவியில் முற்றும் நிரப்புவார்
குன்றாதென் ஊழியமே (2) – ஒன்றுமில்லை (1)
யாவேயின் ஜீவனே என்றனுள்ளத்தினுள்
இடையூறின்றிப் பாய்ந்திட (2)
என்றன் மாசுகளான தடைகள் உடையட்டும்
வந்தேன் அவர் பாதமே (2) – ஒன்றுமில்லை (1)
யாவேயின் கைகளே என்னை நடத்தட்டும்
யாதொன்றுமில்லையே நான் (2)
அவர் வாசலில் தூதனாய் காத்திருப்பேன் நிதம்
மகிழ்ந்து பணி செய்திட (2) – ஒன்றுமில்லை (1)
யாவே திருப்புகழ் சொல்லும் கருவியாய்
ஆவதே என் விருப்பம் (2)
நான் சேவகம் செய்ய உதவாவிடினும் அவர்
சேவடி கீழிருப்பேன் (2) – ஒன்றுமில்லை (1)
யாதொன் மில்லையெனத் தாழ்த்தல் மனதுக்கு
வேதனை தந்திடினும் (2)
எப்போதுமே யாவேவைப் பூலோகம் அறிந்திடப்
புழுதியில் நான் கிடப்பேன் (2) – ஒன்றுமில்லை (2)