oo iyesu palane – Oh Yesu Palanae

ஓ இயேசு பாலனே
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

ஓ இயேசு பாலனே – Oh Yesu Palanae
பாடல் – ஓ இயேசு பாலனே
என்னை தேடி மண்ணில் வந்த இயேசு பாலனே வருக
என்னை மீட்க விண்ணை துறந்த கன்னி மைந்தனே வருக
ஓ இயேசு பாலனே உம்மை வாழ்த்தி பாடி வரவேற்கிறேன்
ஓ இயேசு பாலனே உம்மை போற்றி பாடி வரவேற்கிறேன்
வானம் விட்டு பூமி வந்தீரே
தானமாக தன்னை தந்தீரே
சரணம் – 1
காரிருள் நீக்கிடும் கதிரொளியானீரே
கவலைகள் போக்கிடும் அருமருந்தானீரே
என்னை மீட்க மண்ணில் வந்தீரே
என்னில் சமாதானம் தந்தீரே
என்னை மீட்க வந்தீரே சமாதானம் தந்தீரே
சந்தோஷத்தால் பாடிடுவேன் சங்கீதம்
சரணம் – 2
அதிசயம் அற்புதம் உந்தன் வரவு
ஆனந்தம் பேரானந்தம் உந்தன் உறவு
அன்பின் ரூபமாக வந்தீரே
அடைக்கலமாக வந்தீரே
அன்பின் ரூபமானீரே அடைக்கலமானீரே
ஆனந்தத்தால் பாடிடுவேன் சங்கீதம்