1.oo! kiristhuvennum kanmalai

ஓ கிறிஸ்துவென்னும் கன்மலை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

1.ஓ! கிறிஸ்துவென்னும் கன்மலை
புயலிலோர் புகலிடம்!
எத்தீங்கிலும் அக்கன்மலை,
புயலிலோர் புகலிடம்!
ஓ! சோர்ந்த பரதேசிக்கோர் கன்மலை
ஓர் கன்மலை! ஓர் கன்மலை!
ஓ! கிறிஸ்து இயேசுவாம் நித்ய கன்மலை
புயலிலோர் புகலிடம்!
2.பகல் நிழல், ராக்காவலாம்
புயலிலோர் புகலிடம்!
பகைவர் பயமில்லையாம்
புயலிலோர் புகலிடம்!
3.சீறியே புயல் மோதினும்
புயலிலோர் புகலிடம்!
விடோம் தஞ்சம் ஓர் போதிலும்
புயலிலோர் புகலிடம்!
4.திவ்ய நேசக் கன்மலையே
புயலிலோர் புகலிடம்!
துணை நில்லும் சகாயரே
புயலிலோர் புகலிடம்!
ஓ கிறிஸ்துவென்னும் கன்மலை பாடல் வரிகள், Oh Kiristhuvennum Kanmalai Lyrics