oru pothum maravaatha

ஒரு போதும் மறவாத தேவனே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

ஒரு போதும் மறவாத தேவனே
ஒரு போதும் மறவாத நேசரே
இருகரம் கூப்பி சிரம் தனை தாழ்த்தி
மண்டியிட்டு வந்து நிற்கும்
மண்ணான மனிதன் நான் அல்லோ
என்னை கண்ணார கண்டிரங்கும்
மோசேயோடு முகமுகமாக
பேசின தெய்வமல்லவோ
கண்களில் கண்ணீரோடு
கதறிய நின்றிடும்
என்னோடு பேசும் தெய்வமே
என்னோடு பேசும் தெய்வமே
என்னோடு பேசும் தெய்வமே
யாக்கோபை போல் இரவு முழுவதும்
போராடி ஜெபித்துடுவேன்
ஆசீர்வதித்தாலன்றி
உம்மை நான் விடுவதில்லை
உம் பாதம் எந்தன் தஞ்சமே
உம் பாதம் எந்தன் தஞ்சமே தேவா