oru varththai sonnale poothum

ஒரு வார்த்தை சொன்னாலே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

ஒரு வார்த்தை சொன்னாலே போதும்
இயேசு ஒரு வார்த்தை சொன்னாலே போதும்
என் பாரம் தீர்ந்தே போகும்
பாடுவேன் தினம் புது கீதம்
1.பெருங்காற்றை அமர்த்திட
ஒரு வார்த்தை சொன்னாரே
மரித்த லாசரு எழும்பிட
ஒரு வார்த்தை சொன்னாரே
2.குருடனின் கண் திறக்க
ஒரு வார்த்தை சொன்னாரே
குஷ்டரோகிகள் குணமாக
ஒரு வார்த்தை சொன்னாரே
3.மாராவின் தண்ணீரை
மதுரமாய் மாற்றினாரே
உந்தன் மாறாத கண்ணீரை
மாற்றிட வல்லவரே