orupoothum vilakitar

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

ஒருபோதும் விலகிடார்
ஒருநாளும் கைவிடார்
வழி காட்டும் தெய்வம் உண்டு
விழியற்ற என் வாழ்விலே
இருள் யாவும் நீக்கிடுவார்
புது வாழ்வு தந்திடுவார்
கஷ்ட நஷ்டங்கள் சூழ்ந்த போதும்
துன்பம் தொல்லைகள் நேர்ந்தபோதும்
ஒருபோதும் விலகிடார்
ஒருநாளும் கைவிடார்
காக்கும் தெய்வம் உண்டெனக்கு
கலங்கின நேரங்களில்(வேளைகளில்)
கரம் பிடித்து நடத்துவார்
கண்மணிபோல் காத்திடுவார்
பெலன் அளிக்கும் தேவன் உண்டு
பெலன் அற்ற வேளைகளில்
என் கிருபை போதும் என்றீர்
தயவாய் என்னை நடத்திடுவீர்(தாங்கிடுவீர்)
வாக்குத்தத்தம் செய்த தேவன்
சொன்னதை நிறைவேற்றுவார்
நம்மோடிருந்து நடத்துவார்
முடிவு பரியந்தம் தங்கிடுவார்