Oruputhum maaratha

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

ஒரு போதும் மாறாத
உம் மேலான அன்பு
தன்னலம் காட்டாத அது
சீரான அன்பு
தாயினும் மேலான உம்
தாராள அன்பு
நீங்காமல் கண்மணி போல்
காத்திடும் அன்பு
இனம் புரியாத அன்பை
என் மேல் வைத்தீங்க – 2
என்னை வியக்கதக்க விசித்திரமா
நடத்துறீங்கப்பா – 4
1.கந்தை துணியே போல
கசக்கி ஏறியபட்டவன் நான்
காடி நீரை போல கசப்பாயி
ருசிக்கப்பட்டவன் நான் -2
கழுதை என் மேல்
நீர் ஏறி அமர்ந்த பின்னே
கரடு முரடான பாதை
நேராய் கண்டேன் – என்னை வியக்கதக்க
2.மந்தை மேய்த்த எனக்காய்
உம் விண்ணை உதறி வந்தீர்
சிந்தை உமக்கு என் மேல் அதனால்
தன்னை தானே தந்தீர் – 2
கூரை என்னுள் நீர்
குடிபுகுந்த பின்னே
குறைவுகள் எல்லாம் என்னில்
நிறைவானதாய் கண்டேன் – என்னை வியக்கதக்க
Yes amazingly and peculiarly he cares and carries us, our God is the Lord who never forsake and forgets us, He says Before I formed you in the womb I knew you, and I consecrated you. YES, He raises the poor from the dust and lifts the needy from the ash heap.
His LOVE towards us never FADES
He is the Lord who search for one lost sheep
He is dad who waits for his lost son
LOVE = JESUS