Ovvoru Nallum Un thiru Namam song lyrics

ஒவ்வொரு நாளும் உன் திரு நாமம்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

ஒவ்வொரு நாளும் உன் திரு நாமம்
ஓதிக்கொண்டே நான் எழுந்திடுவேன்
உன் புகழென்னும் சொல்லொன்றே
இன்றெதிலும் நான் எழுதிடுவேன் – ஒவ்வொரு
கதிரவன் எழுந்திட காரிருள் மறைந்திடும்
கவினுறு புது நாள் விடிந்து வரும்-2
பழையன கழிந்திட புதியன புகும்
பாரே மகிழ்ச்சியில் நிறைந்து விடும்
ஏழையின் சிரிப்பிலே உன் முகம் தெரியும்
எழுந்திடும் செயல்களில் உன் உளம் விளங்கும்
ஏங்கிடும் உள்ளங்கள் மகிழ்ச்சியில் திளைக்கும்
இதனால் உன்னாட்சி இந்நாளில் அணுகி வரும் – ஒவ்வொரு
நேற்றைய நாளினும் இன்று நான் வாழ்வினில்
நேர்மையில் நீதியை கடைபிடிப்பேன்-2
வேற்றுமை தவிர்ப்பேன் வேதனை துடைப்பேன்
வேதத்தை வாழ்வால் எடுத்துரைப்பேன்
பொய் எனும் இருளை உண்மையால் வெல்வேன்
பரிவுள்ள விதத்தில் பாசத்தை சொல்வேன்
விழியுள்ள பேருக்கு நான் தனை தருவேன்
இவற்றால் உன்னாட்சி இந்நாளில் அணுகி வரும் – ஒவ்வொரு