paakiyamae perum silaakkiyamae

பாக்கியமே பெரும் சிலாக்கியமே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

பாக்கியமே பெரும் சிலாக்கியமே
இயேசுவின் சேவை பாக்கியமே
எண்ணிலா மாந்தர் இயேசுவை காண
எங்கும் நற்செய்தி சாற்றிடுவோம்
1. எட்டு திக்கும் இயேசுவை அறிந்திடவே
எழும்பியே சேவை புரிந்திடுவோம்
எதிர்த்து நிற்கும் சேனை வென்று
இயேசுவால் ஜெயமே எகிடுவோம்
2. அழைப்பினை உணர்ந்து
சேவை செய்வோம்
அயராது அவரன்பை கூறிடுவோம்
வல்லமை யாவும் அழித்திடுவார்
வல்லவர் இயேசுவை சாற்றிடுவோம்
3. ஆத்தும தரிசனம் கண்டிடுவீர்
ஆண்டவர் வார்த்தையை உணர்த்திடுவீர்
தேர்ந்த வாசல் அடைபடுதே
அதிக வேகம் சேவை செய்வோம்
4. அழுகையும் புலம்பலும் தொனிக்குதே
அன்பரே தீவிரம் வருகிறாரே
வேதம் நிறைவேறும் காலமிதே
சேவை புரிந்தே எகிடுவோம்
5. சபை தமிழ் ஒரு மனம் காத்திடுவோம்
பலமுள்ள தூண்களாய் விளங்கிடுவோம்
அழிந்திடும் மாந்தரின் சேவைக்கென்றே
அன்பரின் பாதம் படைத்திடுவோம்