Paatu Paaduvaen

பாட்டு பாடுவேன்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

பாட்டு பாடுவேன்
புது பாட்டு பாடுவேன்
இயேசு என்னை தேடி வந்ததால்
தாளம் போடுவேன் கை தாளம் போடுவேன்
இயேசு எந்தன் உள்ளம் திறந்ததால்
விண்ணும் மண்ணும் பாடிட
விந்தை பாலர் கேட்டிட
நானும் பாடுவேன் மகிழ்ந்தாடி பாடுவேன்
ஆனந்த பாட்டு இது சந்தோச பாட்டு
ஆனந்த பாட்டு இது ரட்சிப்பின் பாட்டு
கடல் அலைகள் ஆர்ப்பரித்து வாழ்த்து சொல்லிடுமே
கலகலவென நீரோடைகள் இசை எழுப்பிடுமே
காண மயிலும் சோலை குயிலும் ராகங்கள் சேர்த்திட
துள்ளி ஓடிடும் புள்ளி மான் கூட்டம் தலைநரை தந்திட
யார் இவர் யாரோ இவர் மகிமையின் ராஜன்
யார் இவர் யாரோ இவர் மகத்துவ தேவன்
துதிகளின் மத்தியில் வாசம் செய்திடும் தேவ குமரன் இவர்
தூதரும் தூயரும் போற்றி பாடிடும் துதிகளின் பாத்திரன்