Paavam Pokka Vagai Paarum

பாவம் போக்க வகை பாரும்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Salvation Army Songs collection.

பல்லவி
பாவம் போக்க வகை பாரும்; ஐயா
தாவி உன் மெய் மீட்பர் யாரென்று தேடும்
சரணங்கள்
1. ஆவி இருக்கின்ற கூடு என்றும்
அழியாதிருக்கும் மேல் வீட்டையே நாடு – பாவம்
2. வாழ்வைச் சதமென்றிராதே, கெட்ட
மாய்மாலக்காரர் வலையில் விழாதே – பாவம்
3. சாக்குபோக்கு நீ சொல்லாதே வீணாய்
வாக்கு வாதங்களால் மனதைத் தேற்றாதே – பாவம்
4. பாவத்தின் நோயை நானுணர்ந்து, தேவ
ஆவியால் இரட்சிப்பைக் கண்டுகொண்டேனே! – பாவம்
5. இரட்சிப்பை இப்போதே தேடும் இல்லால்
சிட்சிப்பார் இயேசும்மை பேய்க்கணத்தோடு – பாவம்
6. நீயுமிவ்வாதைக்குள்ளானாயோ? ஐயா
தீய நசலிதைத் தீர்ப்பாரே இயேசு – பாவம்
பாவம் போக்க வகை பாரும் பாடல் வரிகள், Paavam Pokka Vagai Paarum lyrics