pagalilum kaatha nal deva

பகலிலும் காத்த நல் தேவா

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

பகலிலும் காத்த நல் தேவா
இந்த இரவிலும் காத்திடும்
கனவிலும் உம்முடன் பேச
என் கர்த்தரே என்னோடிரும் -2
1. நாச மோச பாதைகளில்
நாளும் நான் நடந்தேனையா
துன்ப துக்க வேளைகளில்
துவண்டு தான் போனேனையா
உம் திரு இரத்தம் கொண்டென்னை
என் பாவம் போக்கினீரே -2
நாட்டிலும் வீட்டிலும்
ஜெயத்தின் வாழ்வைத் தாரும் -2
2. காலங்கள் தினம் மாறிடினும்
கிருபைகள் மாறாதையா
கண்ணின் மணிபோல் காத்திடும்
கருணையின் தேவா ஸ்தோத்திரம்
கலங்காதே என்றென்றும் என்னை
கனிவோடு சொன்னவரே
காலையும் மாலையும்
ஜெபிக்க பெலன் தாரும்