Pakthare Vaarum

பாமாலை
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

1. பக்தரே வாரும்
ஆசை ஆவலோடும்
நீர் பாரும் நீர் பாரும் இப்பாலனை
வானோரின் ராஜன்
கிறிஸ்து பிறந்தாரே
சாஷ்டாங்கம் செய்ய வாரும்
சாஷ்டாங்கம் செய்ய வாரும்
சாஷ்டாங்கம் செய்ய வாரும், இயேசுவை
2. தேவாதி தேவா
ஜோதியில் ஜோதி
மானிட தன்மை நீர் வெறுத்திலீர்
தெய்வ குமாரன்
ஒப்பில்லாத மைந்தன்
சாஷ்டாங்கம் செய்ய வாரும், இயேசுவை
3. மேலோகத்தாரே
மா கெம்பீரத்தோடு
ஜென்ம நற்செய்தி பாடிப் போற்றுமேன்
விண்ணில் சந்தோஷம்
மண்ணில் சமாதானம்
சாஷ்டாங்கம் செய்ய வாரும், இயேசுவை
4. இயேசுவே வாழ்க
இன்று ஜென்மித்தீரே
புகழும் ஸ்துதியும் உண்டாகவும்
அன்பின் சொரூபி
அருள் அவதாரம்
சாஷ்டாங்கம் செய்ய வாரும், இயேசுவை