Panipani Thuli Pol Pozhigirathe

பனித்துளி போல் பொழிகிறதே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

பனித்துளி போல் பொழிகிறதே
தேவனின் அபிஷேகம்
பின்மாரியின் மழை பொழியும்
காலம் வந்ததே-2
ஒருமனதோடு சபையாரெல்லாம் (ஊழியரெல்லாம்)
ஒன்று கூடுங்கள்-2
கர்த்தர் பெரிய காரியம் செய்யும்
வேளை வந்ததே-2
வேளை வந்ததே…
1.தலை குனிந்து வாழ்ந்தது போதும்
தலையை உயர்த்திடு
சிங்கத்தை போல கெர்ஜித்து
எதிரியை துரத்திடு-2
எங்கும் தேவனை தொழுது கொள்ளும்
காலம் வந்ததே-2
எழுப்புதலடைந்து இயேசுவின் நாமத்தை
எங்கும் உயர்த்துவோம்-2
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா-2
2.கோலியாத்தின் சத்தம் கேட்டு
பயந்து போகாதே
உனக்குள் இருக்கும் தேவனை நீ
மறந்து போகாதே-2
விசுவாசமென்னும் கேடகத்தாலே
ஜெயத்தை பெற்றிடு-2
சத்துருவை உன் காலின் கீழே
மிதித்து எறிந்திடு-2-அல்லேலூயா
3.உலகத்தை கலக்கும் தேவ மனிதராய்
தெரிந்து கொண்டாரே
இருபுறமும் கருக்குள்ள பட்டயம்
நமக்கு தந்தாரே-2
சிங்கத்தின் மேலும் பாம்பின் மேலும்
நடந்து செல்லுவோம்-2
சத்துரு மேலே கொடியை ஏற்றி
தேசத்தை சுதந்தரிப்போம்-2-அல்லேலூயா