pappalakkum palapalakkum

பப்பளக்கும் பளபளக்கும்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

பப்பளக்கும் பளபளக்கும்
பாத்திரத்தில் மினுமினுக்கும்
பாட்டிலிலே உள்ள சாராயம்
உன் குடும்பத்தையே வீணாய் ஆராயும்
கொப்பாளிக்கும் பேட்ரி சாராயம்
உன் குடும்பத்தையே வீணாய் ஆராயும்
நடுத்தெருவுக்கு உன் குடும்பம் வரும் வரும்
நாறிப் போன நிலைமைக்குத்தான் போகும் போகும்
சாராயத்தை நாடி குடிப்பவனே ஐயோ
விஸ்கி, பிராந்தி பீர் பாட்டில் ஓடைப்பவனே ஐயோ
குடி குடியை கெடுக்கும் உன் குடும்பத்தையே அழிக்கும்
ஒரு படியேற முடியாமல் தடுமாற வைக்கும்
போதை மீது மயக்கம் உன்
பாதை வீணாய் சறுக்கும்
உன் ஜாதி உன்னை வெறுக்கும்
உன் வீதி கண்டு சிரிக்கும்
பெற்றெடுத்த பிள்ளைகள் கூட
வெறுத்து உன்னை ஒதுக்கும்
உன் சொத்து சுகம் எல்லாமே
அடமானத்தில் போகும்
வெத்தலை பீடா பாக்கு உனக்கு மரண பள்ளத்தாக்கு
மரணவாசல் உனக்கு ரெடியாய் திறந்து வெச்சிருக்கு
வேண்டாம் இந்த பாவம் வீணாய் தேவ கோபம்
திருந்தும் இந்த தருணம் அடைவாய் பரலோகம்
குடிதராத சமாதானம் இயேசு – உன்
குடும்பத்தையே வாழ வைக்கும் இயேசு