paran yesaiya

பரனேசய்யா

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

பரன் இயேசையா எங்கள் அரண் இயேசையா
பரன் இயேசையா எங்கள் அரண் இயேசையா
கொடும் காற்றில் கலையாமல் நீர் காத்த இந்தக் கூடு
உமதன்பின் பசையாலே கீல் பூசிய இந்த வீடு
மாறாமல் மறவாமல் நன்றி சொல்லும்
நன்றி ஐயா உமக்கு நன்றி ஐயா
நன்றி ஐயா எங்கள் அரண் இயேசையா
நன்றி ஐயா உமக்கு நன்றி ஐயா
நன்றி ஐயா எங்கள் அரண் இயேசையா
மறுநாளை சந்திக்க பெலனின்றி உறங்கின
ராத்திரிகள் வந்து போனதைய்யா
எதற்காக வாழ்கிறோம் என்றெண்ணி கலங்கி
படுக்கையைக் கண்ணீரால் நனைத்தோமைய்யா
ராக் காலத்தின் கேள்வியின்மேல்
ராக் காலத்தின் கேள்வியின்மேல்
சூரியனாய் உதித்தீரையா
உணவும் உடையும் இருக்கின்ற இடமும்
உம் கரம் எங்களுக்குத் தந்ததைய்யா
ஏங்கின பொருளும் உயர்வும் வசதியும்
எளிதாக எங்களுக்குத் தந்தீரையா
காட்சியாக வாழ்ந்தோமைய்யா
காட்சியாக வாழ்ந்தோமைய்யா
சாட்சியாய் உள்ளோமைய்யா
இப்போ சாட்சியாய் உள்ளோமைய்யா