1.paraparane, umathu

பராபரனே உமது ராஜாசனத்தின்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

1.பராபரனே, உமது
ராஜாசனத்தின் அண்டைக்கு
பணிந்து தாழ்மையாய் வரும்
இப்பாவியைத் தள்ளாதேயும்.
2.பிதாவே, என்னைத் தேவரீர்
உம் சாயலாய்ச் சிருஷ்டித்தீர்;
நீர்தான் என் ஜீவன் உம்மையே
அல்லாமல் மாண்டு போவேனே.
3.தெய்வீக மைந்தன் இயேசுவே,
வற்றாத அன்பின் ஆழியே,
அடியேன் உய்ய, தேவரீர்,
பலியாய் ஜீவனை விட்டீர்.
4.தேவாவியே என் நெஞ்சை நீர்
திருப்பிப் புதிதாக்கினீர்;
என்னென்ன நன்மை என்னிலே
உண்டோ, அதும்மால் வந்ததே.
5.நீர் சோதனையில் தாங்குவீர்,
எத்துன்பத்திலும் கைவிடீர்;
உம்மால் திடனும் வெற்றியும்
மனமகிழ்ச்சியும் வரும்.