parimala thailam en iyesu rajane

பரிமள தைலம்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

பரிமள தைலம் என் இயேசு ராஜனே
பதினாயிரங்களில் சிறந்தவர் நீரே -2
பரலோகமே உம்மை துதித்திடவே
பணிந்தும்மை தொழுதிடுவேன்
தூதர்கள் போற்றிடும் தூய தெய்வமே!
துதிகளில் வாழ்பவரே!
நீர் வாருமே! ஆவியானவரே!
எங்கள் மத்தியில் அசைவாடுமே ! -2
1.சாரோனின் ரோஜா அவர்
சர்வத்தின் தலையானவர்! -2
சங்கீதத்தால் அவரை நாம்
போற்றி என்றும் பாடுவோம் – 2 – அவரை
போற்றி என்றும் பாடுவோம்
2. பள்ளத்தாக்கின் லீலி அவர்
பர்வதங்களில் உயர்ந்தவர்! – 2
மணவாளனாய் வரும் நாளினில்
மகிமையில் சேர்த்துக் கொள்வார் -2 – என்னை
மகிமையில் சேர்த்துக் கொள்வார்
பரிமள தைலம் பாடல் வரிகள், Parimala Thailam En yesu lyrics