Parisuthar Parisuthar Yesuve

பரிசுத்தர் பரிசுத்தர் இயேசுவே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

1.பரிசுத்தர் பரிசுத்தர் இயேசுவே
வல்லமை உடையவரே -வான்
புவி உந்தன் மகிமையால் நிறைந்தனவே
ஓசன்னா ஓசன்னா
வானில் ஓசன்னா
2.கர்த்தர் செய்த நன்மைக்காய்
என்னத்தை செலுத்திடுவோம்
இரட்சிப்பின் பாத்திரம் எடுத்து
நாம் தொழுதிடுவோம் – பரிசுத்தர்
3.மகிமை மாட்சிமை நிறைந்தவர்
ஆண்டவர் பெரியவர்
அவரது மகிமை அடைந்திட
தொழுதிடுவோம் – பரிசுத்தர்
4.அன்பு உருக்கம் உடையவர்
அன்பால் நிறைந்தவரே
அவரது அன்பை அடைந்திட
பணிந்திடுவோம் – பரிசுத்தர்
5.தாழ்மை இரக்கம் நிறைந்தவர்
தயவால் நிறைந்தவரே
இராஜாதி இராஜன் இயேசுவை
போற்றிடுவோம் – பரிசுத்தர்
6.நாவுகள் உம்மை துதித்திடும்
முழங்கால் முடங்கிடுமே
கர்த்தாதி கர்த்தர் இயேசுவை
உயர்த்திடுவோம் – பரிசுத்தர்