Parisutharae Parigariyae

பரிசுத்தரே பரிகாரியே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

பரிசுத்தரே பரிகாரியே
உன்னதரே நீரே உயர்த்தவரே
மகிமையின் தேவன் நீர் மாத்திரமே
மகத்துவம் நிறைந்தவர் நீர் ஒருவரே
எல்ஷடாய் சர்வவல்லவரே
அகிலத்தை வார்த்தையால் ஆள்பவரே
சிங்காசனம் உமதே
மகிமையும் வல்லமையும் உமதே
துதியும் கணமும் உமதே
பரிசுத்தர் பரிசுத்தர் நீரே
ஆராதிப்போம் சர்வவல்லவரை
உயர்த்திடுவோம் உயர்ந்தவரை -2
சிங்காசனம் உமதே
மகிமையும் வல்லமையும் உமதே
துதியும் கணமும் உமதே
பரிசுத்தர் பரிசுத்தர் நீரே
மணவாளனே என் ஏசுவே
மாணவாட்டியை என்னை அழைத்தவரே
பரிசுத்த வஸ்திரம் தந்தவரே
துதியின் ஆடையால் மூடினீரே
என்னை முழுவதும் உமதாக்கிடுமே
உந்தன் சாயலாய் என்னை மாற்றிடுமே
என்னை நிரப்புமே உந்தன் ஆவியால்
என்னை நிரப்புமே உந்தன் வல்லமையால் -2
என்னை முழுவதும் உமதாக்கிடுமே
உந்தன் சாயலாய் என்னை மாற்றிடுமே