parisuththa thooya aaviye neer enakkul varume

பரிசுத்த தூய ஆவியே நீர்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Good Friday Songs collection.

பரிசுத்த தூய ஆவியே நீர் எனக்குள் வாருமே
நீர் சாரோனின் ரோஜா
எங்களின் ராஜா மாட்சிமை உடையவரே – பரிசுத்த தூய
1.ஆணிகள் அறைந்த கரங்களால்
என்னை அணைத்தீரே
இடி பாய்ந்த நெஞ்சீலே
என்னை தாங்கினீர்
கோர சிலுவையில் என்னை சுமந்தீர்
இதை நினைக்கையில் என் நெஞ்சம் உருகுதே அய்யா – பரிசுத்த தூய
2.ஏழு வார்த்தைகள் சிலுவையில்
தந்து என்னை தேற்றினீரே
உந்தன் சிலுவை அன்பினால் என்னை கழுவினீர்
என் நாதா என்னை உயர்த்தினீர்
இந்த உலகத்தில் நீர் மற்றும் போதும் அய்யா – பரிசுத்த தூய