parisuththavankalin maranam

பரிசுத்தவான்களின் மரணம்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

பரிசுத்தவான்களின் மரணம்
பரலோகம் வரவேற்கும் தருணம்
உலகின் ஓட்டம் முடியும்
உன்னத பயணம் தொடரும்
நிலையில்லாத உலகை விட்டு
நீதியின் தேவனை சரணடைந்து
நித்தமும் மகிழ்ந்து கர்த்தரை புகழ்ந்து
நித்திய வீட்டில் வாழ்ந்திருப்பேன் – பரிசுத்த
மாயமான உலகைவிட்டு
மகிமையின் ராஜ்யம் அடைந்திடுவேன்
மறுரூபமடைந்து மகிமையில் நிறைந்து
மன்னவன் இயேசுவின் முகம் காண்பேன் – பரிசுத்த
துயரம் நிறைந்த உலகை விட்டு
தூதர்களோடு வாழ்ந்திடுவேன்
கவலைகள் வியாதிகள் தொல்லைகள் இல்லை
கண்ணீர் யாவையும் துடைத்திடுவார் – பரிசுத்த