passa sampa nel etuththu kuththi pootamma

பச்ச சம்பா நெல் எடுத்து
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Wedding Songs collection.

பச்ச சம்பா நெல் எடுத்து குத்தி போடம்மா
அட தேங்காய உடச்சி திருவி வையம்மா
பச்ச கிளி போல ஒரு பொண்ணு வராம்மா
புது பொண்ணு பாத்தா அசந்துபோவ ரொம்ப ஜோரம்மா
கல்யாணம் கல்யாணம் இது நம்ம வீட்டு கல்யாணம்
ஆட்டுக் குட்டியானவரின் மேன்மையான கல்யாணம்
கெட்டி மேளம் சத்தம் அது இடி முழங்குது
ஆரவார சத்தத்துல வானம் அசையுது
சந்தோசமாய் கொண்டாட்டமாய் துதி செலுத்திடு
உற்சாகமாய் ஆனந்தமாய் ஆடிபாடிடு
மணவாளன் வேகமாய் வருகிறார்
மணவாட்டி ஆயத்தமாய் இருக்கிறாள்
தண்ணி எடுக்கனும்
வீட்ட பெருக்கனும்
வாசல் வெளிய கோலம் போடனும்
பாயாசத்த பக்குவமா செஞ்சு எடுக்கனும்
சுக்கு இடிக்கனும்
கடைக்கு போகனும்
அச்சு வெள்ளம் வாங்கி எடுக்கனும்
ஊருக்கெல்லாம் ஓல வச்சு அழைக்கனும்
நல்லவரின் நிலையான ஆட்சி நடக்குது
நல்லவரின் கல்யாணநாள் இதோ வந்தது
புத்தாடை கட்டிகிட்டு தாவி குதித்து
மத்தாப்பு கொளுத்தி நீ ஓடி கொண்டாடிடு
பூவைபோல் ஆடைகள் அணிந்தவள் அவள்
பரிசுத்த வானங்களின் நீதியே
பந்தல் போடனும்
பாய விரிக்கனும்
தோரனத்த கட்டி முடிக்கனும்
வாய்குள்ள கற்கண்ட போடனும்
பட்டு உடுத்தனும்
மெட்டு பிடிக்கனும்
மொத்த பூவ வாங்கி கொடுக்கனும்
நாதஸ்வரம் சத்தம் எங்கும் கேட்கனும்
பச்ச சம்பா நெல் எடுத்து பாடல் வரிகள், Pacha Samba Nel Eduthu Lyrics