pataiththathellam thara vanthoom

படைத்ததெல்லாம் தர வந்தோம்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

படைத்ததெல்லாம் தர வந்தோம்
பரம்பொருளே உன் திருவடியில்
உன் நினைவு எல்லாம் பெயர் சொல்லும்
என் வாழ்வினிலே ஒளி வீசும்
உழைப்பினில் கிடைத்திட்ட பொருள் எல்லாம்
உன்னதரே உந்தன் மகிமைக்கே
தந்தையே தயவுடன் ஏற்றிடுவாய்
தாழ்ந்து பணிந்து தருகின்றோம்
வாழ்வினில் வருகின்ற புகழ் எல்லாம்
வல்லவரே உந்தன் மாட்சிமைக்கே
கருணையின் தலைவா ஏற்றிடுவாய்
கனிவாய் உவந்து தருகின்றோம்