patal pata varththaikal illai

பாடல் பாட வார்த்தைகள் இல்லை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

பாடல் பாட வார்த்தைகள் இல்லை
பரிசுத்தரே உம் மகிமைகளன்றோ
உலகத்தில் என் வாழ்வு
முடியும் வரையில்
பாடுவேனே உந்தனுக்காக
பாடுவேனே உந்தனுக்காக
பாவத்தின் காயத்தால் பாதை ஓரத்தில்
யாருமே அறியாது கிடந்த போது
தூக்கி எடுத்தென்னை அரவனைதீர்
அடைக்கலம் கொடுத்தீரே
என் நேசரே ஆனந்தம் கொடுத்தீரே
யாவர் கண்களில் தயை
பெறாத நான்
கைவிட பட்ட அந்த வேளை
தூக்கி எடுத்தென்னை அரவனைதீர்
அடைக்கலம் கொடுத்தீரே
என் நேசரே ஆனந்தம் கொடுத்தீரே