patal varikal

எழும்பிடு வல்லமையாய்
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

பாடல் வரிகள்
எழும்பிடு எழும்பிடு வல்லமையாய்
ஸ்தேவானை போல எழும்பிடு-2
இரத்தசாட்சியாய் மரிக்க
உன்னை நீயே ஒப்புக்கொடு
இயேசுவின் நாமம் மகிமைப்பட
ஜீவ பலியாய் ஒப்புக் கொடு
1) சிலுவை சுமக்க பயப்படாதே
இயேசுவின் இரத்தத்தை புறக்கணியாதே
உனக்காய் மரித்த இயேசு உண்டு
அவருக்காய் ஜீவனை கொடுத்திடு
2) கோதுமை மணிபோல் மடிந்திடு
அதிக பலனை கொடுத்திடு
உனது ஜீவனை வெறுத்திடு
நித்திய ஜீவனை பெற்றிடு
3)சிம்சோனை போல எழும்பிடு
எதிரியை துரத்தி ஜெயம் எடு
தேவ பெலத்தால் நின்றிடு
அவர் சித்தம் செய்து மடிந்திடு