patal varikal – kanikkai patal

காணிக்கை தர வந்தேன்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

பாடல் வரிகள் – காணிக்கை பாடல்
பாம க ம ப … ஸ க பாம கமத பா
கப நி ப நி ரி ஸாரி பா ம க… பம பம க ரி ஸ
காணிக்கை தர வந்தேன் உம் கரங்களில் எனை தந்தேன் – 2
பலியாக நாளும் திரு பலியாக நானும்
உனது பலியில் உள்ளம் இணைந்து உனதாக மாறிட
ஆ… ஆ… ஆ
1. வயலில் விளையும் கோதுமை மணிகள்
வெயிலில் உலரும் வியர்வையில் மலரும்
வானம் தூவும் பனி மலையில் நனையும்
வாழ்க்கை முழுதும் தியாகத்தில் கரையும்
உருவம் இழந்து உணவாய் மாறும்
உடலில் கலந்து உயிரில் வாழும்
அதுபோல நானும் பலியாக வேனும்
இறைவா வந்தேன் இதயம் தந்தேன்
2. திராட்சை கொடியே தியாகத்தின் வடிவே
தாகம் தீர்க்கும் கனியின் ரசமே
அருகே வருவேன் பருகிட துணிவேன்
உயிர் தரும் ஊற்றாய் நான் மாறிடுவேன்
பொங்கி பெருகும் வெள்ளம் போல
உள்ளம் உன்னில் தாகம் தீர
கிளையாக நானும் உனில் சேர வேண்டும்
பலன் தருவேனே பலிபொருளாக