patal varikal – kanikkai patal

பலியிது பலியிது இயேசுவின்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

பாடல் வரிகள் – காணிக்கை பாடல்
பலியிது பலியிது இயேசுவின் பலியிது
நாமும் இணைந்திடுவோம் அவரைப் போல் மாறுவோம் -2
1. இறைவன் மைந்தனே பலிபொருள் என
தன்னை இழந்திடும் பலியிதுவே -2
அகந்தை நீக்கியே தியாகம் செய்துமே அன்பினைப் பகிர்வோம் -2
இயேசுவில் வாழ்வோம் இயேசுவாய் வாழ்வோம் -2
2. உறவின் மையமாய் உலகின் தீபமாய்
இறைவன் மாறிடும் பலியிதுவே -2
புதிய ஆவியும் புதிய இதயமும் கொடையெனப் பெறுவோம் -2
இயேசுவில் வாழ்வோம் இயேசுவாய் வாழ்வோம் -2