patal varikal – matha patal

போற்றி போற்றி பாடுதே
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

பாடல் வரிகள் – மாதா பாடல்
போற்றி போற்றி பாடுதே புகழ்ந்து ஏத்திப் பாடுதே
ஆண்டவரை நெஞ்சம் பாடுதே
என்னைக் கண்ணோக்கினார்
வாழ்வைப் பொன்னாக்கினார் – 2
அந்த மீட்பரிலே மகிழ்ந்து (பாடுதே) – 2
1. உலகம் ஒதுக்கிய என்னை உறவாய் கொண்டார்
விலை மதிப்பில்லா பேறுகள் எனக்களித்தார் – 2
தலைமுறை எல்லாம் என்னை வாழ்த்திடுமே – 2
தலைவனவர் திருநாமம் புனிதமாமே – 2
2. அவரைப் பணிபவர் என்றும் இரக்கம் பெறுவார்
ஆணவம் கொண்டோர் யாவரும் அழிவுறுவார் – 2
செல்வர்களெல்லாம் வறுமையில் வாடச் செய்தார் – 2
பசித்தோரை நிறைவாக்கி வாழச் செய்தார் – 2
போற்றி போற்றி பாடுதே பாடல் வரிகள், Pottri Pottri Paaduthae Lyrics