patal varikal – narkarunai patal

நல்ல இதயம் தா அதில் நாளும்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

பாடல் வரிகள் – நற்கருணை பாடல்
நல்ல இதயம் தா அதில் நாளும் வாழ்ந்திட வா
வல்ல செயல்களை செய்யும் மனதினை தந்திட வா – 2
(இறைவா) – 4
1. பாசம் காட்ட துடிக்கும்
நல்ல உறவை வளர்க்க நினைக்கும் – 2
நீதி வளர நினைக்கும் – 2
எங்கும் நேர்மை கண்ணில் தெரியும்
எல்லாம் நடந்திடுமே என் இயேசுவே
எந்நாளும் (என்னோடு நீ வாழ்ந்தால்) (2) – 2
2. உரிமை குரல் எங்கும் கேட்கும்
பல மாற்றம் தேட துடிக்கும் – 2
மனிதர் ஒன்று சேர்ந்தால் – 2
எங்கும் மனிதம் பிறந்திடுமே (எல்லாம்)