patal varikal – varukai patal

இறைக்குலமே வாருங்களே பலியினில்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

பாடல் வரிகள் – வருகை பாடல்
இறைக்குலமே வாருங்களே பலியினில் கலந்திடவே
குருக்குலமே வாருங்களே இறை அருளினை பகிர்ந்திடவே – 2
புனிதம் நிறைந்திட மனிதம் மலர்ந்திட
நம் வாழ்வும் வளமாகிட – 2
1. கடலில் நடந்தவர் நம் இயேசுவே
காற்றை கடிந்தவர் நம் இயேசுவே
கலங்கரை தீபமும் நம் இயேசுவே
நம்மையும் அழைக்கின்றார் – 2
கல்வாரி பலியினில் கருணையின் தொடர்பினில்
மீட்பினில் இணைந்திடுவோம் – 2
2. குருடர் பார்த்தனர் அவர் பெயரால்
முடவர் நடந்தனர் அவர் செயலால்
செவிடர் கேட்டனர் அவர் அருளால்
நாமும் சுகம் பெறுவோம் – 2 (கல்வாரி)