patappata inikkuthaiyya

பாடப்பாட இனிக்குதைய்யா
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

பாடப்பாட இனிக்குதைய்யா
பரமனே உம் நாமம்
தேடத்தேட தெரியுதைய்யா
தேவனே உம் பாதம் -உம்மை
1.இசையின் வழியில் இறைவா உந்தன்
புகழைப்பாடும் பக்தன் நானே
இசையின் வழியில் இறைவா உந்தன்
பணியைச்செய்யும் பக்தன் நானே
திசைகள் யாவிலும் உம் புகழ் பரவ ஆ ஆ ஆ ஆ
இசையை என்னில் வைத்திட்ட தேவா
பூமியின் உருண்டைமேலே வீற்றிருக்கும் ஆண்டவா
பாவ வினை போக்கவே மனுவுருபூண்டவா
சர்வ லோக பாவத்திற்காய் சிலுவையிலே மாண்டவா
சாவை வென்று மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தவா
2.தாயின் கருவில் இருந்த போதே
தயாபரா என்னை தெரிந்தெடுத்தீர்
சேயாய் நானும் வளர்ந்த போது ஆ ஆ ஆ ஆ
ஆவியால் என்னை நிரப்பின தேவா
அக்கினி ஜூவாலைப் போன்ற கண்கள் என்னை பார்க்குதே
அக்கினி அபிஷேகம் என் தலை மேலே இறங்குதே
அசுத்தமான குப்பை எனை சுட்டு எரிக்குதே
புடமிட்டு என்னை சுத்தப் பொன்னாக மாற்றுதே -பாடப்பாட
பாடப்பாட இனிக்குதைய்யா பாடல் வரிகள், Pada Pada Inikkuthaiyya Lyrics