pathalam vin man yavilum – Pathaalm Vin Man Yaavilum

பாதாளம் விண் மண் யாவிலும்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

பாதாளம் விண் மண் யாவிலும் – Pathaalm Vin Man Yaavilum
1.பாதாளம், விண், மண் யாவிலும்
மேலான யேசுவே,
உமக்கு பேய்க் கணங்களும்
நடுங்குவார்களே.
2.உமது நாமம் பாவிக்கு
ஜீவாமிர் தமாமே;
நான் சொஸ்தமாகும்படிக்கு
சஞ்சீவி அதுவே.
3.சிறையுற்றோரின் விலங்கை
தறித்துப் போடுவீர்;
பெலனற்றோர்க்குப் பெலத்தை
கொடுத்துத் தாங்குவீர்.
4.என் வாழ்வு தாழ்வு சாவிலும்
நான் உம்மைப் பற்றுவேன்;
உம்மால் உண்டான மீட்பையும்
கொண்டாடிப் போற்றுவேன்.