Pathinaayirangalil azhaganavar

பதினாயிரங்களில் அழகானவர்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

பதினாயிரங்களில் அழகானவர் – Padhinaayirangalil Aazganavar
பதினாயிரங்களில் அழகானவர்
சுந்தரரே மா வல்லவரே-2
உம் நாமம் மிக இனிமை
உம் தியாகம் மகா மேன்மை -2
தந்தை தாய்க்கும் மேலானவர்
உற்றார் நண்பர்க்கும் மேலானவர்-2
நேசித்தீர் எனக்காய் நின்றீர்
நேசரே ஜீவ நாதனே -4
சிலுவையை சுமந்தீர் எனக்காகவே
தகுதி ஆக்கினீர் என் இயேசுவே -2
உம் காயம் சுகம் தந்ததே
உம் இரத்தம் சுத்தம் செய்ததே -2
அழகும் சௌந்தர்யம் உள்ளவரே
ரூபம் இல்லாமல் இருப்பவரே-2
மனிதனாய் மாறி நீர் வந்தீர்
உம்மை போல் என்னை மாற்றினீர்-2- பதினாயிரங்களில்
உம் ஒருவருக்வே இயேசு
உம் ஒருவருக்வே -3
என் வாழ்வின் ஆராதனை
உம் ஒருவருக்வே
முழங்காலில் என் தலை
என்றும் தாழ்த்தி
என் உயிருள்ள நாளெல்லாம் உயத்துவேன்
முழங்காலில் என் தலை தாழ்த்துவேன்
என் உயிருள்ள நாளெல்லாம்
ஹா ஹா ஹல்லேலுயா ..ஆமென்