pavam enral enna? – What is sin?

பாவம் என்றால் என்ன

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

பாவம் என்றால் என்ன? – What is sin?
எல்லாவற்றிற்கும் மேலாக முதலாவது பாவம் என்றால் என்ன என்று நாம் புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாக இருக்கிறது. தேவனோடுள்ள நம் கீழ்ப்படியாமையையும், பகையையும் பாவமாக விவரிக்க முடியும். இது தேவனுடைய திட்டத்திலிருந்து அகன்று போவதற்கும், தேவனுடைய கட்டளைகளுக்கும் கீழ்ப்படியாம லிருப்பதற்கும் காரணமாக இருக்கிறது. வேதாமம் சொல்கிறது, “எல்லாரும் பாவஞ்செய்து தேவ மகிமையற்றவர்களாகி ( 3:23). ஒருவனுடைய மதத்திற்கோ, ஜாதிக்கோ ஏற்ற நிலையில் பாவமானது மாறுவது இல்லை. பாவத்தினால் நாம் தேவனோடு இருந்த ஐக்கியத்தை இழந்துவிட்டோம். தேவ பிரசன்னத்திலிருந்து நாம் விலகிப் போகும்போது, அவருடைய பார்வையில் நாம் எல்லாரும் பாவிகளாக மாறுகிறோம். அதனுடைய அர்த்தம் நாம் எல்லாரும் தவறான கிரியைகளைத் தான் செய்கிறோம் என்றல்ல. மாறாக, எந்த ஒரு தவறான கிரியையும் செய்யக்கூடிய ஒரு சுபாவத்தை நாம் உடையவர்களாக இருக்கிறோம் என்பதுதான். இந்த சூழ்நிலைக்கு அதாவது ஆதாமின் பாவம் தான் நம்மை இழுத்துக் கொண்டு போயிருக்கிறது.
வேதாகமம் சொல்கிறது, “பாவத்தின் சம்பளம் மரணம்” (ரோமர் 6:23). நாம் செய்கிற கிரியைகளினால் நாம் பாவிகளாக பிறக்கவில்லை மாறாக, ஆதாமின்மூலம் தான்என்று பார்த்தோம். அதுபோல, பாவத்தின் தண்டனையான மரணத்திலிருந்து நம் சொந்த கிரியைகளினால் விடுதலை அடைய முடியாது. நம் பாவத்தினால் தேவனுடைய பார்வையில் நாம் குற்றவாளிகளாக இருக்கிறோம். ஆகவே, நாம் தண்டனைபெற வேண்டியவர்களாக இருக்கிறோம். நம் மனசாட்சியே எப்பொழுதும் இந்த சத்தியத்தை நமக்குச் சொல்கிறது. தண்டனைக்கான பயம் நம் மனஅமைதியை திருடிக் கொள்கிறது. இன்று உலகத்தில் நாம் காணும் பகை, விரோதம் மற்றும் அழிவு பாவத்தின் விளைவுகளாக இருக்கின்றன. ‘பாவம்’ என்கிற உண்மையை நாம் மறுத்தால் அதில் எந்த ஒரு அர்த்தமும் இல்லை.
இந்த உலகத்தில் அநேக விதமான மனிதர்கள் இருக்கிறார்கள். மதசார்புள்ளவர்கள் மற்றும் மத சார்பற்றவர்கள், தெய்வீக பயமுள்ளவர்கள் மற்றும் நாத்திகர்கள், ஞானவான்கள் மற்றும் முட்டாள்கள், பணக்காரர்கள் மற்றும் ஏழைகள், தேவனுக்கு முன்பாக எல்லாரும் பாவிகள்தான்.