Pavani Selkintar Raasaa

பவனி செல்கின்றார் ராசா
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

பவனி செல்கின்றார் ராசா – நாம்
பாடிப் புகழ்வோம் நேசா
அவனிதனிலே மறிமேல் ஏறி
ஆனந்தம் பரமானந்தம்
1.எருசலேமின் பதியே – சுரர்
கரிசனையுள்ள நிதியே!
அருகில் நின்ற அனைவர் போற்றும்
அரசே, எங்கள் சிரசே!
2.பன்னிரண்டு சீஷர் சென்று – நின்று
பாங்காய் வஸ்திரம் விரிக்க
நன்னயம்சேர் மனுவின் சேனை
நாதம் கீதம் ஓத
3.குருத்தோலைகள் பிடிக்க – பாலர்
கும்புகும்பாகவே நடிக்க
பெருத்த தொனியாய் ஓசன்னாவென்று
போற்ற மனம் தேற்ற
பவனி செல்கின்றார் ராசா பாடல் வரிகள், Bavani Selkintar Raasaa Lyrics