pavikal nangkal aiya

பாவிகள் நாங்கள் ஐயா

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Good Friday Songs collection.

பாவிகள் நாங்கள் ஐயா
௭ங்கள் மீது இரங்கும் ஐயா
பரிசுத்தராய் வாழ்ந்திடவே
ஆவியை ஊற்றும் ஐயா
உப்புக்கு சாரத்தை அளித்த தேவா
உம் வசனத்தை சாரமாய் மாற்றினிரே
உந்தனின் வார்த்தையை யார் கேட்டாலும்
அவர்களின் ஆத்துமாவும் உயிர்பெறுமே
மதுரமே ஈக்களைத் தேடிடுமோ
மாந்தராம் எங்களை நாடி வந்தீர்
உந்தனின் நிழலாய் வாழ்ந்திடவே
பாவங்களை ஒழித்துவிட்டேன் ஏற்றுக்கொள்ளும்
பூலோக சொந்தங்கள் பல வந்தாலும்
பரலோகில் உம் சொந்தம் நிலையானதே
உந்தனின் வருகையின் நாளினிலே
எங்களையும் பேர் சொல்லியே அழைத்திடுமே