payappatathe nan unnutan iruppen enrar

பயப்படாதே நான்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

பயப்படாதே நான் உன்னுடன் இருப்பேன் என்றார்
திகையாதே நான் உன் தேவன் என்றார்-(2)
உன்னை பெலப்படுத்தி சகாயம் செய்திடுவேன்
நீதியின் கரத்தால் உன்னை தாங்கிடுவேன் – பயப்படாதே
1.வியாதியோ துன்பமோ
வேதனை நெருக்கமோ-(2)
எந்தனின் வாழ்க்கையில்
குறுக்கிட முடியாது-(2) – பயப்படாதே
2.பெருவெள்ளம் சூழ்ந்ததோ
கொடுங்காற்று வீசிற்றோ-(2)
சேதமே அணுகாமல்
உன்னையும் தாங்குவார் – பயப்படாதே
3.மாறிடும் உலகினில்
மனிதர்கள் பகைக்கையில்-(2)
கரத்தினை நீட்டியே
மார்போடு அனைப்பாரே-(2) – பயப்படாதே