payappatathe nee vetkappattup poovathillai

பயப்படாதே நீ வெட்கப்பட்டு போவதில்லை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

பயப்படாதே நீ வெட்கப்பட்டுப் போவதில்லை
நிந்தை இல்லை கர்த்தர் சொல்லும் மாறாத வாக்கு
மலைகள் விலகும் பர்வதம் பெயரும்
கர்த்தரின் கிருபை என்றும் விலகாது
நீதியில் நிலைப்பாய் திகில் என்றும் இல்லை
கர்த்தர் சொல்லும் மாறாத வாக்கு
உனக்கு எதிராய் எழும்பும் ஆயுதம்
வாய்க்காது இது உனது சுதந்திரம்
சமாதானம் தங்கும் தயவாலே காப்பேன்
கர்த்தர் சொல்லும் மாறாத வாக்கு