Payathodum Nadukkathodum

பயத்தோடும் நடுக்கத்தோடும்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

பயத்தோடும் நடுக்கத்தோடும்
கர்த்தாவே நான் ஜெபிக்கணுமே
உம் பாதத்தில் நான் ஜெபிக்கும் போது
அபிஷேகம் இறங்கணுமே-2
சர்வ சிருஷ்டிகரே என்னைப்
படைத்தவர் நீர்தானையா-2
நீர் இல்லா என் வாழ்விலே
நிம்மதியில்லையையா-2
ஒளியாய் வந்தவரே
எந்தன் உள்ளத்தில் வாருமையா-2
இந்த உலகின் சுடரொளியாய்
என் வாழ்வை மாற்றுமையா-2
சத்திய தேவாவியே
உந்தன் பாதையில் நடத்துமையா-2
தேற்றரவாளன் நீரே
தேற்றிட வாருமையா-2