pelaveenarin pelanum – Belaveenarin Belanum

பெலவீனரின் பெலனும்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

பெலவீனரின் பெலனும் – Belaveenarin Belanum
1.பெலவீனரின் பெலனும்
துக்க பாரம் சுமந்த
பாவ மாந்தர் நம்பிச் சாரும்
கன்மலையுமாகிய
யேசு நாதா
என்னைப் பெலப்படுத்தும்.
2.என் இதயம் ஜன்ம பாவம்
ஊறும் ஊற்றேயானது;
என்னுடைய குணமனைத்தையும்
தீமையால் நிறைந்தது;
பாவத்தோடு,
ஐயோ, நான் பிறந்தேனே!
3.உம்முடைய ரத்தத்தாலே
குற்றம் நீக்கி ரட்சியும்;
என்னை உந்தன் ஆவியாலே
சுத்தமாக்கி அருளும்;
ஆ கர்த்தாவே!
ஆற்றித் தேற்றி ரட்சியும்.
4.என்னுடைய நெஞ்சில் வந்து
தங்கும், என் சகாயரே;
துக்கத்தை அதால் மறந்து,
வெற்றிக்கொண்டு வாழ்வேனே;
பூரிப்போடு
உம்மைப் பாடிப்போற்றுவேன்.