penkale nattin kankale kankale

பெண்களே நாட்டின் கண்களே
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

பெண்களே நாட்டின் கண்களே கண்களே
கண்களே சரீரத்தின் தூண்களே
கண்கள் இருளடைந்தால்
வாழ்வும் இருளடையும்
பெண்கள் ஒளியடைந்தால்
நாடும் உயர்வடையும்
பெண்களே நாட்டின் கண்களே கண்களே
1. அமெரிக்கா தேசத்தில் ஐடாஸ்காடர் பிறந்தார்
அருட்பணிக்காய் மருத்துவத்தில் டாக்டர் பட்டம் பெற்றார்
வேலூரில் பிரசவத்தில் மரித்த பெண்களைக் கண்டார்
மருத்துவராய் பெண்களுக்கு முதல் முதல் உதவிகள் செய்தார்
வேலூரில் CMC மருத்துவ மனையை தந்தார்
மருத்துவத்தில் பட்டம் பெற CMC துவங்கி வைத்தார்
பெண்களே நாட்டின் கண்களே கண்களே
கண்களே சரீரத்தின் தூண்களே
பெண்களே நாட்டின் கண்களே
2. ஐரோப்பா தேசத்தில் பிறந்தார் அன்னைத்தௌரசா
கல்கத்தாவில் கண்ணியரின் மடத்திலே சேர்ந்து கொண்டார்
அனாதை குழந்தைகட்கு அன்னை தாயானாள்
அமைதியை காத்த அவர் நோபல் பரிசும் பெற்றார்
தொழுநோயாள் எய்ட்ஸ் நோயால் போதை ஏற்றும் மருந்தால்
அழிந்துபோகும் இந்தியரை அன்னை அனைத்துக்கொண்டார்
பெண்களே நாட்டின் கண்களே கண்களே
கண்களே சரீரத்தின் தூண்களே
பெண்களே நாட்டின் கண்களே
3. அயர்லாந்தில் பிறந்தார் ஏமி கார்மைக்கேல்
ஜப்பானில், இலங்கையில் அருட்பணி செய்து வந்தார்
தமிழ்நாட்டில் பண்ணைவிலை கிராமத்தில் அருட்பணி செய்தார்
டோனாவூர் சிற்றூரில் நட்சத்திர ஐக்கியம் தந்தார்
தேவாதி தேவனை தொழுதிட ஆலயம் தந்தார்
நோயாலே வாடினோர்க்கு மருத்துவமனையும் தந்தார்
பெண்களே நாட்டின் கண்களே கண்களே
கண்களே சரீரத்தின் தூண்களே
கண்கள் இருளடைந்தால்
வாழ்வும் இருளடையும்
பெண்கள் ஒளியடைந்தால்
நாடும் உயர்வடையும்