Perumazhai Polavae Lyrics

பெருமழையை போலவே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

பெருமழையை போலவே ஊற்றுங்கப்பா
பின்மாரி மழையாய் ஊற்றுங்கப்பா -2
உளர்ந்த எலும்புகள் உயிரடையனுமே
பலத்த சாட்சியாய் எழும்பி நிற்கனுமே
அக்கினியாய் ஊற்றுங்கப்பா-2
அன்பின் ஆவியே தூய ஆவியே
அன்பின் ஆவியே பலத்தின் ஆவியே
மாசமான யாவர் மேலும் ஊற்றும் ஆவியை -2
ஊற்றுங்கப்பா உங்க ஆவியை
பலமாக ஊற்றுங்கப்பா -2
எங்க தேசத்தின் மேல் ஊற்றுங்கப்பா
எங்க சபைகளின் மேல் ஊற்றுங்கப்பா -2
1.இருள் நிறைந்த தேசமெல்லாம் வெளிச்சமாகணும்
நீதிமான்கள் பெருகி களிக்கூறணும் -2
வேத வசனம் வளர்ந்து திருப்தியாகணும்
பூரண கிருபை பெற்று ஜனங்கள் மகிழனும் – ஊற்றுங்கப்பா
2.தேவன் கொடுத்த மீட்பை ஜனங்கள் அறியணும்
சுவிசேஷத்தின் வெளிச்சம் எங்கும் சொல்லணும் -2
இருளில் இருக்கும் ஜனங்கள் வெளிச்சம் பார்க்கணும்
மெய் தெய்வம் இயேசு என்று உலகம் அறியணும் -2 – ஊற்றுங்கப்பா
3.அருவருப்பின் ஆவிகள் அழிய வேண்டுமே
அந்தகார வல்லமைகள் ஒழிய வேண்டுமே -2
இரட்சிப்பின் சந்தோஷத்தால் நிரம்ப வேண்டுமே
தேவனின் ராஜ்ஜியம் இறங்க வேண்டுமே -2 – ஊற்றுங்கப்பா