Peyar Solli Alaitha Lyrics

பேர் சொல்லி அழைத்த

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

பேர் சொல்லி அழைத்த உன் தேவன்
அவர் உண்மையுள்ளவர் (2)
உன் தலையை உயர்த்துவார்
உன்னை மேன்மைப்படுத்துவார்
1. மலைகளெல்லாம் உன் வழிகளாகும்
உன் பாதைகள் உயர்த்தப்படும்
வாலாக்காமல் உன்னை தலையாக்குவார்
கீழாக்காமல் உன்னை மேலாக்குவார்
2. கர்த்தரே உந்தன் மேய்ப்பராவார்
உன் கண்ணீரை துடைத்திடுவார்
புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவார்
அமர்ந்த தண்ணீரண்டை நடத்திடுவார்
3. கரம்பற்றி நடத்தும் கர்த்தரவர்
உன் கவலைகள் போக்கிடுவார்
தாயைப் போல உன்னைத் தேற்றிடுவார்
தாபரமாய் உன்னை அணைத்திடுவார்