Pin Selluvean En Meetparae

பின் செல்வேன் என் மீட்பரே
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Salvation Army Songs collection.

பின் செல்வேன் என் மீட்பரே – Pin Selluvean En Meetparae
பல்லவி
பின் செல்வேன் என் மீட்பரே – நானும்மைப்
பின் செல்வேன் என் மீட்பரே
அனுபல்லவி
நான் செய்த பாவங்கள் நின் தயவால் தீர
நாதா ஜீவன் விட்டாய் வன் குருசில் அதால்
சரணங்கள்
1. என் சிலுவை எடுத்தேன் – எல்லாம் விட்டு
என்றும் நின்னையே அடுத்தேன்
நின் திருப்பாதத் தடங்களை நோக்கி நான்
நித்தமும் சென்று உம் சித்தம் என்றும் செய்து – பின்
2. சிங்கம்போல கெர்ச்சித்தே – எந்தன் நேசரே
சீறி மிக வெதிர்த்தே
கங்குல் பகலும் தீ அம்பு என்மேல் எய்யும்
கடியின்மேல் ஜெயம் பெற்று அடியேன் நின்னருள் பெற்று – பின்
3.நெருக்கம் செய்தால் மனுஷர் – அதென்னையுன்
நெஞ்சண்டை யோட்டுவதாம்
யாரிடத்தில் பல சோதனைகள் பதைத்தாலும்
பார்த்திபனே; உன்னை ஒருபோதுமே விடேன்
4.காசினியோர்கள் என்னைப் பகைத்தாலும்
காதல னேசு உன்னைப்
பாசமதாகவே பணிந்து தொழுவேனே;
பாக்கிய நகரில் பின் உன்னோடு வாழ்வேனே