pinmari peyyattum pinmari – Pinmari Peiyattum Pinmari

பின்மாரி பெய்யட்டும் பின்மாரி
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

பின்மாரி பெய்யட்டும் பின்மாரி – Pinmari Peiyattum Pinmari
பின்மாரி பெய்யட்டும் பின்மாரி பெய்யட்டும்
பின்மாரி பெய்யட்டுமே இயேசுவே
கல்வாரி அன்பினை எல்லோரும் கண்டிட
பின்மாரி பெய்யட்டுமே -இயேசுவே
ஆதிநாட்கள் தொட்டு ஆவியானவரின்
அற்புத சக்திகளை இயேசுவே
பாவிகளாயினும் நாங்களும் கண்டிட
ஊற்றியருளணுமே-இயேசுவே
உள்ளம் உடல் பொருள் பங்கம் பதர் இன்றி
சுட்டெரித்தாகணுமே இயேசுவே
ஏசாயா நாவினைத் தொட்டத் தழலுடன்
மேசியா நீர் வாருமே -இயேசுவே
எண்ணற்ற தேவைகள் எனைச்சூழ நிற்கையில்
எந்தன் நிலை பாருமே இயேசுவே
எத்தனை வீழ்ச்சிகள் எத்தனை தோல்விகள்
எந்தன் நிலை மாற்றுமே -இயேசுவே
தேசம் எங்கும் தேவ செய்தி முழங்கிட
ஊக்கம் அருளணுமே இயேசுவே
மரணபரியந்தம் உண்மையாய் விளங்க
இயேசு என்னில் வாருமே -இயேசுவே