pirasannare um pirasannaththal

பிரசன்னரே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

பிரசன்னரே உம் பிரசன்னத்தால்
மூழ்கி மூழ்கி எழும்பனுமே
வெளிச்சமே உம் வெளிச்சமாய்
என் முகம் மாறட்டுமே
கணுக்கால் அளவு வேண்டாம் வேண்டாம்
முழங்கால் அளவு வேண்டவே வேண்டாம்
நீந்தி நீந்தி நீச்சல் ஆழம் சென்று
மூழ்கி மூழ்கி உம்மை பார்க்கணும் இயேசையா
நீந்தி நீந்தி நீச்சல் ஆழம் சென்று
மூழ்கி மூழ்கி பெற்றுக்கொள்ளனும் உம்மை நான்
வார்ததையே உம் வார்த்தையால்
நிரப்பி நிரப்பி பெலப்படுத்தும்
அக்கினியே நீதியின் சூரியனே
உம் அக்கினியால் நிரப்பிடுமே – கணுக்கால்
ஆவியே பரிசுத்த ஆவியே
எடுத்து என்னை பயன்படுத்தும்
பரிசுத்த பர்வதத்தில் இருப்பவர்
என்னை வரங்களாலே அலங்கரியும்