Pithavae Umathaviyai

பிதாவே உமதாவியை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

1.பிதாவே உமதாவியை
அன்பாய் அனுப்பி அவரை
அடியாருக்கு ஈந்திடும்
நற் சீரைத் தந்து ரட்சியும்.
2. கெட்டோம் திரும்ப ரட்சித்தீர்;
விழுந்தோம், மீட்புண்டாக்கினீர்;
இம்மீட்பை நாங்கள் பற்றவும்
மெய் விசுவாசம் தந்திடும்.
3.துன்பத்தை இன்பமாக்குவீர்
இருளில் ஜோதி காண்பிப்பீர்,
மந்தாரம் மூடும் சாவிலே
அருளின் ஒளி வீசுமே.